திங்கள், 18 மே, 2009

மக்களவைத் தேர்தல் 2009 முடிவுகள்

இராமநாதபுரம் மக்களவை தொகுதி
மொத்த வாக்குகள் - 11,31,741 பதிவான வாக்குகள்- 7,74,266

1. ஜே.கே. ரித்திஷ் (திமுக) -2,94945
2. வ. சத்தியமூர்த்தி (அதிமுக) -2,25,030
3. எஸ்.திருநாவுக்கரசர் (பா.ஜ.க) -1,28,322
4. பிரிசில்லா பாண்டியன் (பகுஜன் சமாஜ்) -39,086
5. எஸ்.சலிமுல்லாகான் (மனித நேய மக்கள் கட்சி) -21,439
6. எஸ்.சிங்கை ஜின்னா (தேமுதிக) -49,571
7. ஆர்.முகம்மது ஆபித் அலி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) -1,496

சுயேச்சைகள் வேட்பாளர்கள்
8.கே.காளிமுத்து -1769
9. எஸ்.சண்முகையா பாண்டியன் -1119
10. எஸ்.சுவார்ட்ஸ் துரை -961
11. கே.செல்லத்துரை -1186
12. பாலமுருகன் -1244
13. பி.பாஸ்கரன் -2330
14. ஜி.முருகேந்திரன்-3471
15. எம்.ஐ.ஜஹாங்கீர்-5870

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்கள் விபரம்

ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள், அவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் விவரம் அடைப்புக் குறிக்குள்:

1951-ம் ஆண்டு -நாகப்பசெட்டியார், காங் -1,09,110, (டி.சுந்தரம், கிஷான் மஸ்தூர்-44118),

1957-ல் பி. சுப்பையா அம்பலம், காங் -89,701, (ஆர்.கே. ராமகிருஷ்ணன், சுயே -50668), 1962-ல் எம். அருணாச்சலம், காங் -1,45,396, (சலிவதீஸ்வரன், சுதந்திரா-114513),

1967-ல் எம். ஷெரீப், சுயே -1,80,392 (எஸ். பாலகிருஷ்ணன், காங் -1,48,367),

1971-ல் பி.கே. மூக்கையாத் தேவர், பார்வர்டு பிளாக் -2,08,431, (எஸ். பாலகிருஷ்ணன், ஸ்தா. காங் -1,39,276),

1977-ல் பி. அன்பழகன், அதிமுக -2,97,612, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,22,482),

1980-ல் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -2,75,049, (பி. அன்பழகன், அதிமுக -1,90,916),

1984-ல் வி. ராஜேஸ்வரன் -காங் -2,74,922, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,74,778),

1989-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,98,145, (சுப. தங்கவேலன், திமுக -2,18,601),

1991-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,48,415, (காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, 1,76,889),

1996-ல் எஸ்.பி. உடையப்பன், த.மா.கா -3,31,249, (வி. ராஜேஸ்வரன், காங் -1,35,945),

1998-ல் வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,58,978, (எஸ்.பி. உடையப்பன், தமாகா -2,34,886),

1999-ல் கே. மலைச்சாமி, அதிமுக -2,65,253, (எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக -2,58,607),

2004-ல் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக- 2,35,287, (செ. முருகேசன், அதிமுக-2,25,337),

2009-ல் கே. சிவக்குமார் என்ற ஜே.கே. ரித்தீஷ், திமுக -2,94,945, (வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,25,030).

தற்போது நடைபெற்று முடிந்துள்ள 15-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி. சத்தியமூர்த்தியை விட கூடுதலாக 69,915 வாக்குகள் பெற்று, ஜே.கே. ரித்தீஷ் வெற்றி பெற்றுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ். சலீமுல்லாஹ் கான் 21, 430 வாக்குகளட பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் தொகுதிவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

ராமநாதபுரம், மே 16: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்களை, மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி சனிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு:

அறந்தாங்கி: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (21,658), ஜே.கே. ரித்தீஷ், திமுக (39,460), எஸ். திருநாவுக்கரசர், பா.ஜ.க. (28,917), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (1,745), எஸ். சலிமுல்லாகான், மனிதநேய மக்கள் கட்சி (1,489), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,456).

திருச்சுழி: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (42,452), ஜே.கே. ரித்தீஷ், திமுக (56,467), திருநாவுக்கரசர், பாஜக (7,589), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (2,319), எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (1,634), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,053).

பரமக்குடி: வ. சத்தியமுர்த்தி, அதிமுக (43,113), ஜே.கே. ரித்தீஷ், திமுக (45,218), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,573), பிரிசில்லா பாண்டியன், பகுஜன்சமாஜ் (11,617), எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (3,637), சிங்கை. ஜின்னா, தேமுதிக (4,575).

திருவாடானை: வ. சத்தியமுர்த்தி, அதிமுக (31867), ஜே.கே. ரித்தீஷ், திமுக (53,840), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (25,913), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (4,623), எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (4,774), சிங்கை. ஜின்னா, தேமுதிக (6,154).

ராமநாதபுரம்: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (38,698), ஜே.கே. ரித்தீஷ், திமுக (47,850), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (28,551), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (3,119), எஸ். சலிமுல்லாகான், திமுக (6,712) சிங்கை. ஜின்னா, தேமுதிக (9,393).

முதுகுளத்தூர்: வ. சத்தியமூர்த்தி, அதிமுக (47,032), ஜே.கே. ரித்தீஷ், திமுக (50,425), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,451), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (15,532), எஸ். சலிமுல்லாகான், ம.ம.க.(3,184), சிங்கை. ஜின்னா, தேமுதிக (8,926).

தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:

வ. சத்தியமூர்த்தி, அதிமுக (2,24,820), ஜே.கே. ரித்தீஷ், திமுக (2,93,260), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (1,27,994), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (38,955), எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (21,430), சிங்கை. ஜின்னா, தேமுதிக (49,557).

வெள்ளி, 1 மே, 2009

த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்.

இராமநாதபுரத்தில் தமுமுக தலைவர் பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கீழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்," குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. தி.மு.க., தருவதாக இருந்த ஒரு சீட்டுக்கு ஆசை பட்டிருந்தால் தி.மு.க., வுக்கு நாங்கள் அடிமையாகிருப்போம். சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப்பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார்.

மேலும் அவர் ராமநாதபுரம் தொகுதியில் திருச்சுழி, காரியாபட்டி, பூலாங்கல், பெருநாழி, சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி பகுதியில் பிரசாரம் செய்தார். மாவட்ட பொறுப்பாளர் சல்மான், ஒன்றிய செயலாளர் வாவா ராவுத்தர், சம்சுதீன் சேட், மாவட்ட துணை தலைவர் ஹிமாயுன் கபீர், மாவட்ட தலைவர் சாதிக், தேர்தல் பொறுப்பாளர் சிராஜ் பங்கேற்றனர்.

இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

படத்தை பெரிதாக்கி வாசிக்கவும்

வியாழன், 23 ஏப்ரல், 2009

இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

இரமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் S.சலிமுல்லாகான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு.

இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் எஸ்..சலிமுல்லாகான் அவர்கள் முதுகுளத்தூர் ஒண்றியம் கிருஸ்ணாபுரம், தணிச்சியம், ஒடைக்குளம், கிடாரம், மாரியுர், உப்பிலான், பேரையுர், முதுகுளத்தூர், முஸ்தபாபுரம், காக்கூர், தேரிருவேலி, காரையேந்தல் ஆகிய ஊர்களில் ஜமாத்துகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குகள் சேகரித்தார். இவர்களுடன் கோவை.செய்யது (மாநில பேச்சாளர்) மற்றும் O.U.ரஹ்மத்துல்லா (மாநில பொருளாளர் த.மு.மு.க) மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு.


வேட்பாளர் சலிமுல்லாகான் அவர்கள் பேசும்போது சாலை வசதி , மின்சார வசதி, குடிதண்ணிர் மற்றும் மருத்துவ வசதி செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இக்கூட்டத்திற்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதன், 22 ஏப்ரல், 2009

இராமநாதபுரத்தில் 7 முணை போட்டி.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகள் இடையே 7 முனை போட்டி நிலவுகிறது சமுதாய ஓட்டுக்களை குறிவைத்து வேட்பாளர்கள் தீவிரம்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளிடையே 7 முனை போட்டி நிலவுகிறது. சமுதாய தலைவர்களை சந்தித்து ஓட்டுகளை பெற வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வாக்காளர்கள்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கி உள்ளது. இவற்றில் மொத்தம் 11,30,489 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முக்குலத்தோர் 2,79,874 பேரும், ஆதி திராவிடர்கள் 2,54,882 பேரும், முஸ்லிம்கள் 1,85,302 பேரும், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 1,45,909 பேரும் உள்ளனர்.

இவை தவிர, முத்தரையர் 79,873 பேரும், நாயக்கர் 19,943 பேரும், நாடார் 29,765 பேரும், கிறிஸ்தவர்கள் 28,068 பேரும், சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்கள் 17,487 பேரும், வேளாளர் மற்றும் உடையார் 20,845 பேரும், செட்டியார் 26,791 பேரும், ரெட்டியார் 12,368 பேரும், பிள்ளைமார் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினர் 29,382 பேரும் உள்ளனர்.

7 முனை போட்டி

தற்போதைய நிலவரப்படி ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மனிதநேய மக்கள் கட்சி போன்ற முக்கிய கட்சிகளிடையே 7 முனை போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் கணிசமான ஓட்டுக்களை பெற சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

நன்றி: தினத்தந்தி

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் சலீமுல்லாஹ் கான் பிரச்சார விபரம்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் சலீமுல்லாஹ் கான் பிரச்சார விபரம்.

12-04-2009 திருவாடணை- ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்கப்பட்டது.

13-04-2009 புதுவலசை, சின்னக்கடை மீண்காரதெரு, பாசிபட்டரை தெரு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரினார். ஜமாத் நிர்வாகம் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆதரவு தருவதாக உறுதிஅளித்துள்ளார்.

14-04-2009 அத்தியுத்துஇஆற்றாங்கரை ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஓட்டு பொடுவதாக வாக்களித்தனர்

15-04-2009 மாநில நிர்வாகிகளின் சந்திப்பு .

16-04-2009 பெரிய பட்டிணம், ரெகுநாதபுரம் , வண்ணாங்குண்டு புளியங்குடி செய்யது அவர்களின் உரை-பெரியபட்டிணம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எழுச்சியும் வரவேற்பும் காணப்பட்டது.

17-04-2009 ஈசா பள்ளிவாசல். ஜமாத், ஜும்மா உரை பொட்டகவயல் ஜமாத்-அஸர் தொழுகை சித்தார்கோட்டை –மஹரிஃப் தொழுகை வாமூர் - இஸா தொழுகை ஜமாத் நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டனர்

18-04-2009 காலை 10 மணி அளவில் மமக – புதிய தமிழகம் - லீக் தொண்டர்களின் செயல்வீரர்கள் கூட்டம் - மதியம் 2.30 மணி அளவில் நாமினேசன் தாக்கல் செய்யபட்டது. சுமார் 2000 க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். புதிய தமிழகம் கட்சியின் மாநில –மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

19-04-2009 தங்கச்சிமடம் - பாம்பன் - இராமேஸ்வரம் - மற்றும் மரைக்காயர்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகளையும் சங்கத்தினர்களையும் சந்தித்து வாக்குசேகரித்தானர். ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியும் வரவேற்பும் காணப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் களப்பணி தொடரும்...

சனி, 18 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்.

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
வேட்பாளர் சலிமுல்லாஹ் கான்

மேடையில் சலிமுல்லா கான், தஸ்பீக் அலி, வாணி சித்தீக், ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது

இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின் செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்.



ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது பிரச்சார வாகனத்தில்

அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்.

வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் தனது ஆதரவாளர்களுடன்

வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்

சமூக ஜனநாயக முன்னணியின் இந்த வேட்பு மனு தாக்கல் நிகழச்சியில் ஆயிரக்கணக்கில் புதிய தமிழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட பொதுவான பல முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு ஜமாத் நிர்வாகிகளும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர்.

அரன்மனை முன்பாக கூட்டணியினர் மத்தியில் உரையாற்றும் கோவை செய்யது

முன்னதாக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

நன்றி:முகவைத்தமிழன்

சனி, 11 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி, ராம்நாட்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். சலீமுல்லாஹ் கான் அவர்கள் போட்டியிடுகிறார்கள்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் விபரம்:

இது வரை ராமநாதபுரம் தொகுதியில் இருந்து வந்த ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி (தனி), கடலாடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தொகுதி மறு சீரமைப்புக்கு பின்பு ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் திருச்சுழி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.

ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த தொகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது.

இது வரை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி 5 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இது வரை எம்.பி. ஆனவர்கள்


1952 - இராமசாமி செட்டியார்- பார்வர்டு பிளாக் -
1952 - முத்துராமலிங்க தேவர் - பார்வர்டு பிளாக்
1962 - முத்துராமலிங்க தேவர் - பார்வர்டு பிளாக்
1964 - காசிநாததுரை - காங்.
1967 - ஷெரீப் - பார்வர்ட் பிளாக்.
1971 - மூக்கையா தேவர் - பார்வர்டு பிளாக்
1977 - அன்பழகன் - அதிமுக
1980 - சத்தியேந்திரன் - திமுக
1984 - ராஜேஸ்வரன் - காங்.
1989 - ராஜேஸ்வரன் - காங்.
1991 - ராஜேஸ்வரன் - காங்.
1996 - உடையப்பன் - தமாகா
1998 - சத்தியமூர்த்தி - அதிமுக
1999 - மலைச்சாமி - அதிமுக
2004 - பவானி ராஜேந்திரன் - திமுக