புதன், 22 ஏப்ரல், 2009

இராமநாதபுரத்தில் 7 முணை போட்டி.

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகள் இடையே 7 முனை போட்டி நிலவுகிறது சமுதாய ஓட்டுக்களை குறிவைத்து வேட்பாளர்கள் தீவிரம்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளிடையே 7 முனை போட்டி நிலவுகிறது. சமுதாய தலைவர்களை சந்தித்து ஓட்டுகளை பெற வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வாக்காளர்கள்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கி உள்ளது. இவற்றில் மொத்தம் 11,30,489 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முக்குலத்தோர் 2,79,874 பேரும், ஆதி திராவிடர்கள் 2,54,882 பேரும், முஸ்லிம்கள் 1,85,302 பேரும், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 1,45,909 பேரும் உள்ளனர்.

இவை தவிர, முத்தரையர் 79,873 பேரும், நாயக்கர் 19,943 பேரும், நாடார் 29,765 பேரும், கிறிஸ்தவர்கள் 28,068 பேரும், சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்கள் 17,487 பேரும், வேளாளர் மற்றும் உடையார் 20,845 பேரும், செட்டியார் 26,791 பேரும், ரெட்டியார் 12,368 பேரும், பிள்ளைமார் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினர் 29,382 பேரும் உள்ளனர்.

7 முனை போட்டி

தற்போதைய நிலவரப்படி ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மனிதநேய மக்கள் கட்சி போன்ற முக்கிய கட்சிகளிடையே 7 முனை போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் கணிசமான ஓட்டுக்களை பெற சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

நன்றி: தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக